மத்திய அமைச்சரவை

என் ஐ ஐ எஃப் கடன் தளத்தில் ரூ 6,000 கோடியை அரசு முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 25 NOV 2020 3:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், என் ஐ ஐ எஃப் கடன் தளத்தில் அரசு ரூ 6,000 கோடியை பங்கு முதலீடாக செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் மூலம், அசீம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் என் ஐ ஐ எஃப் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை உள்ளடங்கிய, தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியால் ஆதரவளிக்கப்படும் என் ஐ ஐ எஃப் கடன் தளத்தில் கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றி அரசு முதலீடு செய்யும்.

 

1) நடப்பு ஆண்டான 2020-21-இல் ரூ 2,000 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள முன்னெப்போதுமில்லா நிதி நிலைமை மற்றும் குறுகிய நிதி அளவின் காரணமாக, தயார்நிலை மற்றும் கடனுக்கான தேவை இருந்தால் மட்டுமே மேற்கண்ட தொகை வழங்கப்படும்.

2) உள்நாட்டு மற்றும் சர்வதேச ஓய்வூதிய நிதி மற்றும் அரசு நிதிகளில் இருந்து வரும் பங்கு முதலீடுகளை வேகமாகப் பயன்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் என் ஐ ஐ எஃப் எடுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675599

 

*******************


(Release ID: 1675650) Visitor Counter : 288