பிரதமர் அலுவலகம்

அகமது படேல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 25 NOV 2020 9:47AM by PIB Chennai

அகமது படேல் மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘அகமது படேல்  மறைவால் வருத்தம் அடைந்தேன்.  பொது வாழ்விலும், மக்கள் சேவையிலும், அவர் பல ஆண்டுகள் ஈடுபட்டவர்.  அவரது அறிவுக் கூர்மை,  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தியதில் அவரின் பங்கு எப்போதும் நினைவு கூறப்படும்.  அவரது மகன் பைசலிடம் பேசி இரங்கல் தெரிவித்தேன். அகமது படேல் ஆன்மா சாந்தியடையட்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

****


(रिलीज़ आईडी: 1675540) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam