உள்துறை அமைச்சகம்

குறைந்த செலவில் கொவிட் பரிசோதனை நடத்தும் நடமாடும் ஆய்வகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்

Posted On: 23 NOV 2020 7:36PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் அலுவலகத்தில் நடமாடும் கொவிட்-19 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்.

ஸ்பைஸ் ஹெல்த் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவால் இந்த ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் துரிதமாக கொவிட் பரிசோதனைகளை இந்த ஆய்வகம் நடத்தும்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதியை இந்த ஆய்வகம்  பிரதிபலிக்கிறது.

ரூபாய் 499-க்கு பரிசோதனைகளை செய்யும் இந்த ஆய்வகம் 6 முதல் 8 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675139

------ 


(Release ID: 1675181) Visitor Counter : 219