பிரதமர் அலுவலகம்

நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற உள்ள பண்டித தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 19 NOV 2020 7:44PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நவம்பர் 21-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ள காந்திநகர் பண்டித தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் காணொலி வாயிலாகக் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் சுமார் 2600 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெறுவார்கள்.

பட்டமளிப்பு விழாவின்போது, 45 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தியைத் தயாரிக்கும் ஆலை மற்றும் நீர் மேலாண்மை மையம் ஆகியவற்றிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பண்டித தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைகழகத்தில் தொழில்நுட்ப தொழில்களுக்கு வழிபடுவதற்கான மையம்', ‘மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மையம்' மற்றும் விளையாட்டு வளாகம்' ஆகியவற்றை  விழாவின் போது பிரதமர் திறந்து வைப்பார்.

**********************


(रिलीज़ आईडी: 1674168) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam