குடியரசுத் தலைவர் செயலகம்

சாத் பூஜாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 19 NOV 2020 5:11PM by PIB Chennai

சாத் பூஜாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"சாத் பூஜா புனிதப் பண்டிகையை முன்னிட்டு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து சக மக்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாத் பூஜா அன்று சூரியக் கடவுளை வழிபடும் பாரம்பரியம் உள்ளது. மேலும் ஆறுகள், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களுக்கு மரியாதை செலுத்தி இயற்கை அன்னைக்கும் மக்கள் நன்றி கூறி வணங்குவர்.

சாத் பூஜா புனிதப் பண்டிகை அன்று, இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவும், கொவிட்-19 பரவலை மனதில் கொண்டு கொண்டாடவும் நாம் உறுதி ஏற்போம். சாத் பூஜா அனைத்து மக்களையும் நல்ல ஆரோக்கியம் மற்றும் வளங்களோடு ஆசீர்வதிக்கட்டும்," என்று தனது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

**********************


(रिलीज़ आईडी: 1674093) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu