மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சருக்கு வாதாயன் வாழ்நாள் சாதனை விருது

Posted On: 19 NOV 2020 4:01PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்கிற்கு' நாளை மறுநாள் (21.11.2020) இரவு 8.30 மணிக்கு வாதாயன் வாழ்நாள் சாதனையாளர் விருது காணொலி வாயிலாக வழங்கப்படவிருக்கிறது.

அமைச்சரின் எழுத்து, கவிதை மற்றும் இதர இலக்கிய படைப்புகளைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு அவர் ஏற்கனவே பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பேயியிடம் இருந்து சாகித்திய பாரதி விருது, முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் .பி.ஜே. அப்துல் கலாமிடமிருந்து சாகித்திய கவுரவ் சம்மான் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க்’, இலக்கியத்துறையில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவர் இதுவரை பல்வேறு துறைகளில் 75க்கும் மேற்பட்ட புத்தகங்களை இயற்றியுள்ளார். அவரது படைப்பு மொரிஷியஸ் நாட்டு பள்ளிகள் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

லண்டனில் உள்ள வாதாயன் அமைப்பு, கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு சர்வதேச வாதாயன் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674016

*******


(Release ID: 1674045) Visitor Counter : 158