பிரதமர் அலுவலகம்

பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு, 2020 : பிரதமர் நவம்பர் 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்

Posted On: 17 NOV 2020 3:46PM by PIB Chennai

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை,   நாளை மறுநாள் (2020 நவம்பர் 19ம் தேதி காலை 11 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம்  பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு, நவம்பர் 19ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரை நடக்கிறதுஇந்த உச்சி மாநாட்டைகர்நாடக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு, தகவல் தொழில்நுட்பத்துக்கான கர்நாடக அரசின் தொலைநோக்கு குழு, உயிரி தொழில்நுட்பம்  மற்றும் தொடக்க நிறுவனங்கள், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா(STPI), எம்எம்  அறிவியல் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம்  ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கர்நாடக அரசு  நடத்துகிறது.

பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர்  திரு ஸ்காட் மாரிஷன், சுவிஸ் துணை அதிபர் திரு கய் பர்மலின் உட்பட சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்மேலும், சிந்தனையாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியாளர்கள் ஆகியோர் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

‘‘அடுத்தது இப்போது’’ என்ற கருப்பொருளில், இந்தாண்டு உச்சி மாநாடு நடக்கிறது. கொவிட் தொற்றுக்கு பிந்தைய உலகின் முக்கிய சவால்கள்முக்கிய தொழில்நுட்பங்களின் தாக்கம் குறித்தும், தகவல் தொழில்நுட்ப துறையின் புதுமையான கண்டுபிடிப்புகள், உயிரி தொழில்நுட்பம் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

 

*****


(Release ID: 1673465) Visitor Counter : 206