சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா தொற்றால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த எட்டு நாட்களாக 50 ஆயிரத்துக்கும் குறைவானது.

Posted On: 15 NOV 2020 12:30PM by PIB Chennai

கொவிட் 19 தொற்றால் தினமும் புதிதாக  பாதிக்கப்படுவோரின்    எண்ணிக்கை தொடர்ந்து எட்டாவது நாளாக 50 ஆயிரத்துக்கும் கீழே பதிவாவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,100 பேர் மட்டுமே கொவிட் தொற்றுக்காக புதிதாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 7-ம் தேதிதான் புதிதாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் பல்வேறு மக்கள் குழுக்களிடம் கோவிட்டுக்கு ஏற்ற நடத்தை முறைகள் குறித்து வெற்றிகரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, தொற்று குறைந்து வரும்போக்கு பரந்த அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,156 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,79,216 ஆக இருக்கிறது. மொத்த தொற்று எண்ணிக்கையில் இது 5.44 % மட்டும்தான்.

 

புதிதாக சிகிச்சை பெறுவோரை விடவும், புதிதாக குணம் அடைவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு 24 மணி நேரமும் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு குணம் அடைந்தோர் விகிதம் 93.09% ஆக உள்ளது. மொத்த குணம் அடைந்தோர் எண்ணிக்கை 82,05,728 ஆக இருக்கிறது. குணம் அடைந்தோர் எண்ணிக்கைக்கும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் சீராக அதிகரித்து வருகிறது. இப்போது இந்த எண்ணிக்கை 77,26,512 ஆக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 447 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 85.01% பேர் ஆகும்.

 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672993


(Release ID: 1673003) Visitor Counter : 171