குடியரசுத் தலைவர் செயலகம்

நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் தீபாவளி வாழ்த்து

प्रविष्टि तिथि: 13 NOV 2020 6:11PM by PIB Chennai

தீபாவளி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

"இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் எனது சக மக்களுக்கு புனித பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

பல்வேறு மதங்கள் மற்றும் பிரிவுகளை சார்ந்த மக்களால் தீபாவளி கொண்டாடப்படுவதால் இந்த பண்டிகை ஒற்றுமையை வளர்ப்பதாக திரு கோவிந்த் தன்னுடைய செய்தியில் கூறியுள்ளார்.

மாசு இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தீபாவளியை கொண்டாடுமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ள அவர், நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, ஒளி மற்றும் வளத்தை இந்த பண்டிகை கொண்டு வரட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672680

**********************


(रिलीज़ आईडी: 1672723) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu