குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் தீபாவளி வாழ்த்து
प्रविष्टि तिथि:
13 NOV 2020 4:18PM by PIB Chennai
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
"இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள எனது சக மக்களுக்கு தீபங்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தமது வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.
பாரம்பரிய உற்சாகத்தோடு கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை, தீமையை எதிர்த்து நன்மை வெற்றி பெறுவதை குறிப்பதாகவும், பகவான் ராமரின் வாழ்க்கையில் பொதிந்துள்ள நல்ல லட்சியங்கள் மற்றும் கருத்துகள் மீதான நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் இருப்பதாக திரு நாயுடு மேலும் கூறினார்.
இந்திய எல்லைகளைத் தாண்டி தீபாவளிக் கொண்டாடப்படுகிறது. உலகத்திலேயே அதிகமாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் இதுவும் ஒன்று, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மிகவும் உற்சாகத்தோடும், அன்போடும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர் என்று அவர் கூறினார்.
அதே சமயம், கொவிட் பாதுகாப்பு விதிமுறைகளை கருத்தில் கொண்டு, அவற்றை பின்பற்றி தீபாவளையைக் கொண்டாடுமாறு நாட்டு மக்களை குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672637
**********************
(Release ID: 1672637)
(रिलीज़ आईडी: 1672674)
आगंतुक पटल : 202