தேர்தல் ஆணையம்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு நாளை வெளியீடு

Posted On: 09 NOV 2020 6:10PM by PIB Chennai

பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இதர மாநிலங்களின் இடைத் தேர்தல் முடிவுகள் நாளை காலை 8 மணி முதல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் முடிவுகள், https://results.eci.gov.in/என்னும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, வாக்கு  எண்ணிக்கை சுற்றுவாரியாக சில நிமிடங்கள் இடைவெளியில் புதுப்பிக்கப்படும்

“Voter helpline”  என்ற கைபேசி செயலியிலும், தேர்தல் முடிவுகளை அறியலாம். அந்தந்த வாக்கு மையங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் தரும் தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மற்றும் கைபேசி செயலியில் வெளியிடப்படும்.

-----


(Release ID: 1671583) Visitor Counter : 159