தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

4வது இந்தியா மொபைல் மாநாடு டிசம்பர் 8-10ம் தேதி வரை நடக்கிறது:மத்திய அமைச்சர்

Posted On: 09 NOV 2020 5:17PM by PIB Chennai

நான்காவது இந்தியா மொபைல் மாநாடு (ஐஎம்சி 2020) டிசம்பர்    8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை காணொலி காட்சி மூலம் நடைபெறும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டை தொலை தொடர்ப்புத்துறை மற்றும் இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கம் இணைந்து நடத்துகின்றன. இந்த 3 நாள் மெய்நிகர் மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள், 110-க்கும் மேற்பட்ட சர்வதேச பேச்சாளர்கள், புதிய நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) கலந்து கொள்கின்றன. இந்த மாநாட்டில் 30 மணி நேரத்துக்கும் மேல் விவாதங்கள் நடக்கின்றன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் தொலைநோக்கான தற்சார்பு இந்தியாவை ஊக்குவிப்பதை, இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டிருக்கும்.

இதன் முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, ‘‘தொழில்நுட்ப உந்துதல் முயற்சிகளுக்கு,   இந்தியா மொபைல் மாநாடுஒரு முக்கிய காட்சிப் பொருளாக இருக்கும். ஏனெனில் இது தொலைத்தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கிறது மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குமுறையாளர்கள் மற்றும் தொழில்துறைக்கு தொடர்புடைய முக்கிய தலைப்புகளில், கலந்துரையாடலுக்கான சரியான அமைப்பை வழங்குகிறது. இந்திய அரசு மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் முயற்சிகளை  நம் நாட்டுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் காட்சிப்படுத்தும் தளமாக இந்தியா மொபைல் மாநாடு இருக்கிறது’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671440

-----



(Release ID: 1671578) Visitor Counter : 222