இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

விளையாடு இந்தியா சிறப்பு மையங்கள்: 6 மாநிலங்களுக்கு ரூ 67.32 கோடி ஒதுக்கீடு

Posted On: 07 NOV 2020 4:38PM by PIB Chennai

ஒலிம்பிக் மட்டத்திலான சிறந்த வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பதற்காக ஆறு மாநிலங்களில் விளையாடு இந்தியா சிறப்பு மையங்கள் அமைப்பதற்காக நடப்பு நிதியாண்டு மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ 67.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்துக்கு ரூ 7.96 கோடி, மேகாலயா மாநிலத்துக்கு ரூ 8.39 கோடி, டாமன் டயூ மாநிலத்துக்கு ரூ 8.05 கோடி, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ரூ 19 கோடி, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ 7.91 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, “2028-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவை முதல் பத்து நாடுகளுக்குள் கொண்டு வரும் நோக்கத்துடன் நாடு முழுவதும் விளையாட்டுக்கான சிறப்பு மையங்கள் உருவாக்கப்படுகிறது. உலகத் தரம் வாய்ந்த சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படாவிட்டால், ஒலிம்பிக் போட்டிகளில் தடகள வீரர்களின் திறன்களை அதிகரிக்க முடியாது. ஒவ்வொரு பயிற்சி மையமும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை அளிக்கும். விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தடகள வீரர்கள் பயிற்சி அளிக்கும்போது இந்த மையங்கள் நாட்டின் முக்கியமான வசதிகளாக உருவெடுக்கும்,” என்றார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670983

**********************



(Release ID: 1671054) Visitor Counter : 155