குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

11 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய முறையின் கீழ் தங்களை பதிவு செய்துக் கொண்டுள்ளார்கள்

Posted On: 07 NOV 2020 10:30AM by PIB Chennai

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்/உதயம் பதிவுக்கான புதிய ஆன்லைன் முறை காலம் மற்றும் தொழில்நுட்பத்தை கடந்து நிற்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தப் புதிய முறை வாயிலாக இதுவரை 11 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன.

இந்த புதிய பதிவானது முழுக்க எளிமையாக வசதியாக இருப்பதுடன் நிலைத்தன்மை, உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை பதினொரு லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ள நிலையில்,அதில் 9.26 லட்சம் பதிவுகள் நிரந்தர கணக்கு எண் உடன் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இதில் பதிவு செய்துள்ள 1.73 லட்சம் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெண்கள் ஆவார்கள். உதயம் பதிவுக்கான சிறப்பு நடவடிக்கைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் எடுத்துள்ளது.

2021 மார்ச் 31 வரை நிரந்தர கணக்கு எண் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி எண் இல்லாமல் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

இந்த இணையதளத்தை https://udyamregistration.gov.in என்னும் முகவரியில் அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670895

**********************



(Release ID: 1670990) Visitor Counter : 197