எரிசக்தி அமைச்சகம்

45-வது ஆண்டில் என்டிபிசி, மின்துறையில் மாற்றத்தை நோக்கி இந்தியாவை வழிநடத்துகிறது

Posted On: 06 NOV 2020 2:13PM by PIB Chennai

தேசிய அனல் மின்சார கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (என்டிபிசி) 45-வது ஆண்டை பூர்த்தி செய்யும் நிலையில் இந்திய மின்துறையை முழுமையான மாற்றத்தை நோக்கி அது வழிநடத்துகிறது.

இந்தியாவின் பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி லிமிடெட், தனது நோக்கத்துடன் கூடிய பயணத்தை கடந்த 1975-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி தொடங்கியது. மத்திய மின் துறையின் கீழ் செயல்படும் இந்தப் பொதுத்துறை நிறுவனம், தனது நிறுவன தினத்தை முன்னிட்டு, தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் ஆற்றமிக்க இந்தியாவை நோக்கிய தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தி உள்ளது.

தேசிய அனல் மின்சார கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தொடக்க தினம், இணைய வழியில் கொண்டாப்பட உள்ளது. கொவிட் தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின்போது 

தேசம் முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய என்டிபிசி ஊழியர்கள் இரவு, பகல் பாராமால் 24 மணி நேரமும் பணியாற்றினர்.

மின்சாரம்  நமது வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையாகும். பொதுமுடக்கத்தின் போது அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கியதன் வாயிலாக, தடையற்ற அவசரகால சேவைகளை வழங்குவதிலும், உயிர்காக்கும் கருவிகளின் சுமூகமான பணிகளும் உறுதி செய்யப்பட்டன. இது என்டிபிசிக்கு கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தியது.

மருத்துவப் பணியாளர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்கியவர்கள் உள்ளிட்ட கொரோனா முன்களப் போராளிகளுக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர். அதே நேரத்தில் மின்சாரப் பொறியாளர்களையும் இந்த பெருந்தொற்று புதிய கதாநாயகர்களாக உருவாக்கியது.

என்டிபிசி கடந்த 45 ஆண்டுகளாக நாட்டின் மின்துறையில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இப்போதைய 62 ஜிகாவாட் என்ற மின் உற்பத்தித் திறனை வரும் 2032-க்குள் 130 ஜிகாவாட் ஆக உயர்த்துவது என இது திட்டமிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670598

**********************


(Release ID: 1670719)