கலாசாரத்துறை அமைச்சகம்

மீண்டும் திறக்கப்படும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள்: நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கலாச்சார அமைச்சகம் வெளியிட்டது

Posted On: 05 NOV 2020 4:39PM by PIB Chennai

கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளோடு அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஊரடங்கு தளர்வு 5.0 வழிகாட்டுதல்களின் படியும், கலாச்சாரம் மற்றும் கலைப் படைப்புத் தொழிலின் பல்வேறு பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் இந்த நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகளின் (நிரந்தர மற்றும் தற்காலிக) நிர்வாகங்கள் மற்றும் இந்த இடங்களுக்கு வருகை தரக் கூடிய பார்வையாளர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன.

போதுமான அளவு தூய்மைப்படுத்துதல், அனுமதி சீட்டுகள் விற்பனை மற்றும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகளின் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தொடர்பான விரிவான பாதுகாப்பு வழிமுறைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக் கூடங்கள் திறக்கப்படக் கூடாது. மேலும், கள ஆய்வைப் பொறுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670360

-----


(Release ID: 1670466) Visitor Counter : 260