வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

இளம் குழந்தைகள், பராமளிப்பாளர்கள்/குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்குவதில் மாநகரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான சவால்

Posted On: 04 NOV 2020 4:25PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி மூன்று புதிய திட்டங்களை இன்று புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் துவக்கி வைத்தார்.

இளம் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்றவாறு மாநகரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் சுற்றுப்புறங்களைப் பேணுதல் என்ற சவால்; மாநகரங்களின் தரவு சூழலியலை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பு; மற்றும் 100 பொலிவுறு நகரங்களின் மாநகர தரவு அலுவலர்களுக்கான இணையம் சார்ந்த பயிற்சித் திட்டம் ஆகியவை ஆகும்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஷ்ரா, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இதர பங்குதாரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மூன்று வருட திட்டமான சுற்றுப்புறங்களைப் பேணுதல் என்ற சவால், இளம் குழந்தைகள், பராமளிப்பாளர்கள்/குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்குவதில்  மாநகரங்களுக்கு ஆதரவளிக்கும்.

பெர்னார்ட் வான் லியர் பவுண்டேசன், நெதர்லாந்தின் ஆதரவோடும், டபுள் யூ ஆர் இந்தியாவின் தொழில்நுட்பத்தின் ஆதரவோடும் இந்த சவால் நடத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670032

---- 



(Release ID: 1670171) Visitor Counter : 219