பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய ராணுவக் கல்லூரி தனது வைர விழாவைக் கொண்டாடுகிறது
प्रविष्टि तिथि:
04 NOV 2020 2:32PM by PIB Chennai
தனது வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'இந்தியாவின் தேசிய பாதுகாப்பு - முன்னிருக்கும் தசாப்தம்' என்னும் தலைப்பில் இரண்டு நாள் இணையக் கருத்தரங்கை 2020 நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தினங்களில் தேசிய ராணுவக் கல்லூரி நடத்துகிறது.
தில்லியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் தேசிய ராணுவக் கல்லூரியின் தலைவர் ஏர் மார்ஷல் டி சவுத்ரி ஆகியோர் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.
இந்திய மற்றும் வெளிநாடுகளின் ராணுவப் படைகள் மற்றும் குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அறிவுசார் மேம்பாட்டுக்காகவும், யுக்தி சார்ந்த பயிற்சிகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள தேசிய ராணுவக் கல்லூரி, உலகின் முன்னணி பயிற்சி அமைப்புகளுள் ஒன்று என்று டாக்டர் அஜய் குமார் தெரிவித்தார்.
தேசிய ராணுவக் கல்லூரியின் முதல் பயிற்சி 1960-ஆம் ஆண்டு 21 பங்கேற்பாளர்களோடு தொடங்கியது. தற்போது தனது வைர விழா ஆண்டில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரி, இந்தியாவில் இருந்து 75, நட்பு நாடுகளில் இருந்து 25 என 100 பங்கேற்பாளர்களோடு இயங்குகிறது.
ராணுவப் படைகள் மற்றும் குடிமைப் பணிகளின் உயர் பதவிகளுக்கான மிகவும் பெருமைமிக்க பயிற்சியை தேசிய ராணுவக் கல்லூரி வழங்குகிறது என டாக்டர் அஜய் குமார் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669998
**********************
(Release ID: 1669998)
(रिलीज़ आईडी: 1670019)
आगंतुक पटल : 225