ஜல்சக்தி அமைச்சகம்

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்களுடன் ஜல் ஜீவன் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஆய்வு

Posted On: 03 NOV 2020 5:09PM by PIB Chennai

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஊரக தண்ணீர் விநியோகத்துக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுடன் மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் மெய்நிகர் கூட்டமொன்றுக்கு இன்று தலைமையேற்றார்.

மத்திய அரசின் முக்கியத் திட்டமான ஜல் ஜீவன் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து கூட்டத்தின் போது மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார். 2024-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் இணைப்பை வழங்குவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

ஜல் சக்தி இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா, ஹரியானா மற்றும் திரிபுராவின் முதல்வர்களும் இந்த மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்றனர். திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் இது வரையிலான முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய திரு செகாவத், கொவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் ஊரக வீடுகளுக்கு குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செய்த சிறப்பான பணியைப் பாராட்டினார்.

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் இணைப்பு என்னும் இலக்கை எட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுக்கும் என்று தான் நம்புவதாக மத்திய அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669790

----



(Release ID: 1669911) Visitor Counter : 148