பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான மலபார் 2020 கூட்டுப் பயிற்சி நாளை முதல் நவம்பர் 6 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறும்
प्रविष्टि तिथि:
02 NOV 2020 4:40PM by PIB Chennai
24-வது மலபார் கடற்படை பயிற்சி 2020 நவம்பர் மாதத்தில் இரண்டு பகுதிகளாக நடைபெறும்.
இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான இந்த கூட்டுப் பயிற்சியின் முதல் பகுதி நாளை (நவம்பர் 3) முதல் நவம்பர் 6 வரை விசாகப்பட்டினத்துக்கு அருகே வங்காள விரிகுடாவில் நடைபெறும்.
1992-ஆம் ஆண்டு இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே இரு தரப்பு பயிற்சி நடவடிக்கையாக மலபார் தொடங்கியது. 2015-ஆம் ஆண்டு ஜப்பான் கடற்படை இதில் இணைந்தது. இந்த வருடம் முதல் ஆஸ்திரேலிய கடற்படையும் இதில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறது.
கொவிட்-19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு நேரடி தொடர்பில்லாத கடலில் மட்டுமே நடைபெறும் பயிற்சியாக இந்த முறை மலபார் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளின் நவீன கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன.
இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மலபார் பயிற்சியின் இரண்டாம் பகுதி அரேபியக் கடலில் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669481
*******
(Release ID: 1669481)
(रिलीज़ आईडी: 1669554)
आगंतुक पटल : 309