நிதி அமைச்சகம்

அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) அரசு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

Posted On: 02 NOV 2020 3:17PM by PIB Chennai

அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நவம்பர் 30, 2020 வரை, அல்லது இந்தத் திட்டத்தின் கீழ் ரூபாய் 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் வரை, எது முந்தையதோ அதுவரை இந்தத் திட்டம் நீட்டிக்கப்படுகிறது.

நடப்புப் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், தேவைகளை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தை இதுவரை பயன்படுத்தாதவர்களுக்கும் கடன் பெறும் வாய்ப்பை வழங்கும் வகையில் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் இதுவரை 60.67 லட்சம் பேருக்கு ரூபாய் 2.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுஅதில் ரூபாய் 1.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், முத்ரா கடனாளிகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக  இந்த அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669449

*******

(Release ID: 1669449)



(Release ID: 1669497) Visitor Counter : 256