மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் என்ஐசி இணையதளத்தில் 495 லட்சத்துக்கும் மேற்பட்ட இன்வாய்ஸ்கள் உருவாக்கம், 641 லட்சம் இ-வே ரசீதுகளும் உருவாக்கம்

Posted On: 02 NOV 2020 1:33PM by PIB Chennai

சரக்கு மற்றும்  சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவோர், -இன்வாய்ஸை ( மின்-விலைப்பட்டியல்) தேசிய தகவல் மைய (என்ஐசி) இணையதளத்தில் உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்தில், 495 லட்சம் -இன்வாய்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளனஇதேபோல் கடந்த அக்டோபர் மாதத்தில் 641 லட்சம் -வே பில் (மின்வழி ரசீதுகள்உருவாக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி முறையின் கீழ், சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல -வே ரசீதுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் -இன்வாய்ஸ் முறையையும் அமல்படுத்த 35-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இன்வாய்ஸ் பதிவு இணையதளத்தில் (ஐஆர்பி) பதிவாகும் தகவல்கள், ஜிஎஸ்டி பொது இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும். இதன் மூலம் ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு ஜிஎஸ்டிஆர்1 தாக்கல் எளிதாக இருக்கும். இந்த -வே மற்றும் -இன்வாய்ஸ்களை என்ஐசி இணையதளத்தில் உருவாக்கும் வசதி கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இது குறித்து என்ஐசி கூறுகையில், ‘‘அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்தில் என்ஐசி இணையதளத்தில்வரி செலுத்துவோர் 27,400 பேர், 495 லட்சம் -இன்வாய்ஸ்களை உருவாக்கியுள்ளனர் ’’ என தெரிவித்துள்ளதுகடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த -இன்வாய்ஸ் முறை, ஜிஎஸ்டி வரிமுறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுஇதன் மூலம் இந்த நிதியாண்டில் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படும்.

எளிதாக தொழில் செய்யும் சூழலை அதிகரிப்பதில், இது மற்றொரு மைல்கல் ஆக இருக்கும். இந்த வசதி தொடங்கப்பட்ட கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அன்று  8.4 லட்சம் -இன்வாய்ஸ்கள் உருவாக்கப்பட்டன. இது படிப்படியாக உயர்ந்து, கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 35 லட்சம் -இன்வாய்ஸ்கள் உருவாக்கப்பட்டன. அதோடு கடந்த அக்டோபர் மாதத்தில் 641 -வே ரசீதுகளும் உருவாக்கப்பட்டன.

என்ஐசி இணையதளத்தில் இன்வாய்ஸ் பதிவு எண்கள் உருவாக்கும் முறை, தடையின்றி சுலபமாக இருப்பதாக, ஜிஎஸ்டி வரி செலுத்துவோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669430

----- 



(Release ID: 1669463) Visitor Counter : 182