குடியரசுத் தலைவர் செயலகம்
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2020 12:37PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், திரு சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அலுவலர்கள் திரு சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவப் படத்துக்கு மலர்களைத் தூவி மரியாதை செய்தனர்.
முன்னதாக இன்று காலை புது தில்லியில் உள்ள சர்தார் பட்டேல் நினைவிடத்துக்கு சென்ற குடியரசு தலைவர், திரு சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669026
------
(வெளியீட்டு அடையாள எண்: 1669111)
வருகையாளர் எண்ணிக்கை : 182