இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
96% வீரர்கள் இந்திய விளையாட்டு ஆணைய மையங்களில் ஒலிம்பிக் 2024-க்கான பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளனர்
Posted On:
29 OCT 2020 5:41PM by PIB Chennai
இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்சிறப்பு மையங்களில் விளையாட்டு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து, 96 சதவீத வீரர்கள் ஒலிம்பிக் 2024-க்கான பயிற்சிக்காக இணைந்துள்ளனர்.
அவுரங்காபாத், போபால், பெங்களூரு, தில்லி, லக்னோ, ரோஹ்தக் மற்றும் சோனிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்சிறப்பு மையங்களில் ஒலிம்பிக் 2024-க்கான பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளது.
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்கனவே தகுதி பெற்றுள்ள விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் தற்போது மும்முரமாக பயிற்சிகளை எடுத்து வருகின்றனர்.
பயிற்சி முகாம்களில் இணையும் வீரர்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொண்டு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். கொவிட்-19 தொடர்பான அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. சில வீரர்கள் தீபாவளிக்கு பிறகு முகாம்களில் இணைவார்கள்.
இதற்கிடையே, ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர்களின் தங்குமிட மற்றும் உணவு செலவுகளை ஏற்பதாக இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
அஜய் ஜெயராம் மற்றும் சுபாங்கர் டே ஆகிய வீரர்கள் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் தங்குமிட மற்றும் உணவு செலவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் ரூ 1.46 லட்சத்துக்கு இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கண்ட தொகையில் 90 சதவீதம் உடனடியாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணைப்புகளில் உள்ள ஆங்கில செய்தி குறிப்புகளை படிக்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668477
----
(Release ID: 1668951)