சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

கொவிட் 19 தொற்று போன்ற அவசர சூழலில் நிலையான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்- எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

Posted On: 28 OCT 2020 6:01PM by PIB Chennai

கொவிட்-19 தொற்று போன்ற அவசரமான சூழ்நிலையில், எஸ்சிஓ நாடுகள் இடையே நிலையான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.

எஸ்சிஓ நாடுகள் அமைச்சர்களின் 8வது கூட்டம், ரஷ்யா தலைமையில் இன்று நடந்தது.  காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் திரு கிரிதர் அராமனே கலந்து கொண்டார்.

ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கைக்கு எஸ்சிஓ நாடுகளுடனான இணைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பது பற்றியும், இந்தியாவின் சிறந்த போக்குவரத்து அனுபவம் பற்றியும் அவர் பேசினார்.

கொவிட் தொற்று போன்ற அவசரமான சூழ்நிலையில், நிலையான போக்குவரத்தை உறுதி செய்ய எஸ்சிஓ நாடுகளின் போக்குவரத்து துறை/ அமைச்சர்கள்  அளவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் குறித்தும், நாடுகளுக்கு இடையே தொற்று பரவலை தடுப்பது குறித்தும் அவர் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668176

**********************


(Release ID: 1668226) Visitor Counter : 174