சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

திரிபுராவில் ரூ.2752 கோடி மதிப்பில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அமைச்சர் நிதின் கட்கரி நாளை அடிக்கல்

Posted On: 26 OCT 2020 2:03PM by PIB Chennai

திரிபுராவில் ரூ.2752 கோடி மதிப்பில், 9 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி நாளை அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சி திரிபுரா முதல்வர் திரு பிப்லப் குமார் தேப் தலைமையில், மத்திய இணையமைச்சர்கள்  டாக்டர் ஜிதேந்திர சிங், டாக்டர் வி.கே.சிங் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது. இதில் மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மத்திய, மாநில அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மொத்தம் 9 இடங்களில், 262 கி.மீ தூரத்துக்கு, இந்தச் சாலைகள், ரூ.2752 கோடி செலவில் அமைக்கப்படுகின்றன.  இந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடிவடைந்தால், திரிபுராவுடன் மற்ற மாநிலங்களுக்கும், வங்கதேசத்துக்கும் தடைகள் அற்ற போக்குவரத்து ஏற்படும். திரிபுராவின் சுற்றுலாவும் மேம்படும். வேலை வாய்ப்புகள் அதிகரித்து, திரிபுராவின் சமூகப் பொருளாதார நிலையும் மேம்பட்டு, உள்நாட்டு மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667556

*******

(Release ID: 1667556)


(Release ID: 1667567) Visitor Counter : 183