பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2020

Posted On: 25 OCT 2020 12:40PM by PIB Chennai

மத்திய கண்காணிப்பு ஆணையம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வொரு வருடமும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை (அக்டோபர் 31) முன்னிட்டு இந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது.  குடிமக்களின் பங்களிப்புடன் நேர்மை மற்றும் நாணயத் தன்மையை இந்த மாநாடு உறுதி செய்கிறது.

'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், இந்த வருடம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை  கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மத்திய புலனாய்வுப் பிரிவு நடத்தும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை வரும் 27ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி மத்திய அரசு நிறுவனங்களில் கணினி மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும்.

அனைத்து நிறுவனங்களும் கொவிட்-19 முன்னெச்சரிக்கை வழிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

மேலும்  மத்திய கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அனைத்து ஊழியர்களும் ஏற்கவேண்டும் என்றும், அந்த நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ள விற்பனையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரும் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களும் 'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' இன்னும் கருப்பொருள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு நிறுவனங்களிலேயே ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667441

-----



(Release ID: 1667485) Visitor Counter : 744