இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டேபிள் டென்னிஸ் தேசிய பயிற்சி முகாம் நடத்த இந்திய விளையாட்டு ஆணையம் அனுமதி

Posted On: 24 OCT 2020 5:42PM by PIB Chennai

அக்டோபர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய டேபிள் டென்னிஸ் பயிற்சி முகாமுக்கு விளையாட்டு ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது.

சோனபட்டில் உள்ள தில்லி பொதுப்பள்ளியில் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 11 வீரர்கள்(5 ஆண்கள், 6 பெண்கள்) 4 ஊழியர்களுக்கும் பயிற்சி தரப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமுக்காக மொத்தம் தோராயமாக ரூ.18 லட்சம் ரூபாய்(விமானப்பயணம் மற்றும் மருத்துவச் செலவு உட்பட) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

சோனபட்டில் உள்ள தில்லி பொதுப் பள்ளியில் உள்ள குடியிருப்புகளில் முகாமில் பங்கேற்பவர்கள் தங்குவார்கள். விளையாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக இந்திய விளையாட்டு ஆணையம் அமைத்துள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் முகாமில் பின்பற்றப்படும். இந்த ஆண்டில் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்காக நடக்கும் முதல் தேசிய பயிற்சி முகாமாக இது இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667329

------


(Release ID: 1667348) Visitor Counter : 180