மத்திய பணியாளர் தேர்வாணையம்

குடிமைப்பணிகளுக்கான (முதல் நிலை) தேர்வு 2020-ல் வெற்றி பெற்று குடிமைப் பணிகளுக்கான (முதன்மை) தேர்வு 2020, மற்றும் இந்திய வனத்துறை பணிகளுக்கான (முதன்மை) தேர்வு 2020-க்கு தகுதி பெற்றோர்

Posted On: 23 OCT 2020 8:30PM by PIB Chennai

2020 அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்ற குடிமைப்பணிகளுக்கான (முதல் நிலை) தேர்வு முடிவின் அடிப்படையில் கீழ்கண்ட பதிவு எண்களைக் கொண்டவர்கள் குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு 2020-க்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் தற்காலிகமானதாகும். தேர்வு விதிமுறையில் கூறப்பட்டுள்ளபடி, இந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் விரிவான விண்ணப்பப்படிவம் 1-ன் வாயிலாக குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப்படிவங்கள் மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்((https://upsconline.nic.in)) வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி மாலை 6.00 வரை மட்டும் இடம்பெற்றிருக்கும். அனைத்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்களும் 08/01/2021 வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ள குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு 2020-அனுமதிக்காக  விரிவான விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். விரிவான விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கான முக்கியமான அறிவுறுத்தல்கள் அதனை சமர்பிப்பதற்கான விவரங்கள் இணையதளத்தின் வாயிலாக காணலாம். வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விரிவான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும் முன்பாக, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் உரிய பக்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், 12-02-2020 தேதியிட்டு வெளியிடப்பட்ட பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் இந்திய அரசிதழில்(அசாதாரண) பிரசுரிக்கப்பட்ட குடிமைப்பணிகள் தேர்வுகள் 2020-ன் விதிகளை சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதே போல 2020 அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்ற குடிமைப்பணிகளுக்கான (முதல் நிலை) தேர்வு முடிவின் அடிப்படையில் கீழ்கண்ட பதிவு எண்களைக் கொண்டவர்கள் வனத்துறை பணிகள் (முதன்மை) தேர்வு 2020-க்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் தற்காலிகமானதாகும். தேர்வு விதிமுறையில் கூறப்பட்டுள்ளபடி, இந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் விரிவான விண்ணப்பப்படிவம் 1-ன் வாயிலாக வனத்துறை பணிகள் (முதன்மை) தேர்வு 2020 தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவங்கள் மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்((https://upsconline.nic.in)) காணப்படும். அனைத்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்களும் 2021ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் (சனிக்கிழமை)தேதி முதல் 2021-ம் ஆண்டு மார்ச் 7ம்(ஞாயிறு) தேதி வரை நடைபெற உள்ள வனத்துறைப் பணிகளுக்கான(முதன்மை) தேர்வு 2020-க்கு விரிவான விண்ணப்பங்களை கூறப்பட்டபடி ஆன்லைன் முறையில் பூர்த்தி செய்து சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

விரிவான விண்ணப்பப்படிவங்கள்-1 ஆணையத்தின் இணையதளத்தில் வரும் நவம்பர் 16ம் தேதி(திங்கள்) முதல் நவம்பர் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.00 மட்டும் இடம்பெற்றிருக்கும்.

விரிவான விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கான முக்கியமான அறிவுறுத்தல்கள் அதனை சமர்பிப்பதற்கான விவரங்கள் இணையதளத்தின் வாயிலாக காணலாம். வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விரிவான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும் முன்பாக, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் உரிய பக்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், 12-02-2020 தேதியிட்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சரவையின் இந்திய அரசிதழில்(அசாதாரண) பிரசுரிக்கப்பட்ட இந்திய வனத்துறை பணிகள் தேர்வுகள் 2020-ன் விதிகளை சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667156

-----



(Release ID: 1667219) Visitor Counter : 199