குடியரசுத் தலைவர் செயலகம்

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 23 OCT 2020 5:12PM by PIB Chennai

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

"புனித துர்கா பூஜை அன்று, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் எனது சக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தனது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

"பாரம்பரிய பண்டிகையான துர்கா பூஜை இந்தியா முழுவதும், குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதியில் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, தெய்வ அன்னையை சக்திக்கான தெய்வமாகவும்- தேவி துர்கா, அறிவுக்கான தெய்வமாகவும்- தேவி சரஸ்வதி மற்றும் வளத்துக்கான தெய்வமாகவும்- தேவி லட்சுமி, மக்கள் வழிபடுகின்றனர். நமது பாரம்பரியத்தில் பின்பற்றப்பட்டு வரும் பெண்களுக்கு மரியாதை அளித்தல் என்பது துர்கா பூஜையின் போது சிறப்பான முறையில் வெளிப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, மாத்ரு சக்தி எனப்படும் நமது பெண்களுக்கு மரியாதை அளித்து அதிகாரமளிக்க நாம் உறுதியேற்க வேண்டும்.

வலிமைமிக்க தீமையை வீழ்த்த அனைத்து கடவுளர்களின் ஒருங்கிணைந்த சக்தியையும் துர்கை அன்னை பயன்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் எத்தகைய நெருக்கடியையும் நாம் வெல்லலாம் என்பதை இந்த கடினமான காலகட்டத்தின் இது உணர்த்துகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

-----


(Release ID: 1667115) Visitor Counter : 153