சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உ.பி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு

Posted On: 23 OCT 2020 4:10PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ் வர்த்தன், காணொலி காட்சி வாயிலாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொவிட்-19 முன்னேற்பாடுகள் குறித்தும், கொவிட்டுக்கு ஏற்ற நடத்தைகளை மேற்கொள்வதை உறுதி செய்தல் குறித்தும் மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் தொடக்கத்தில், கொவிட் 19-க்கு எதிராக போராடிய கொரோனா போராளிகளின் முயற்சிகளை ஹர்ஷ் வர்த்தன் பாராட்டினார். கடந்த மூன்று மாதங்களில் நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். “தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95,000 ஆக இருந்ததில் இருந்து இப்போது தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,000-த்துக்கும் கீழே குறைந்துள்ளது. இந்தியாவில் குணம் அடைவோரின் விகிதம் 90% -த்துக்கும் நெருக்கமாக இருக்கிறது. இது தவிர, தொற்றால் உயிரிழப்போரின் விகிதமும் குறைந்திருக்கிறதுஉயிரிழப்போரின் விகிதம் 1.51% ஆக இருக்கிறது. உயிரிழந்தோரின் விகிதத்தை 1%-த்துக்கும் கீழே குறைப்பதை இலக்காகக் கொண்டு முன்னேறி வருகின்றோம்,” என்று திரு.ஹர்ஷ் வர்த்தன் கூறினார்.  

மேலும் ஹர்ஷ் வர்த்தன் கூறுகையில், “கொவிட்-19- தடுக்க பாராட்டத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும்நாட்டின் கொவிட் சூழலை தீர்மானிப்பதில்  அடுத்த மூன்று மாதங்கள் தீர்க்கமானதாக இருக்கப்போகிறது. வரவிருக்கும் விழாக்காலங்கள் மற்றும் குளிர் காலத்தில் கொவிட்டுக்கு ஏற்ற நடத்தைகளை பின்பற்றுதல் மற்றும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாம் மேற்கொண்டால், கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில் நல்ல நிலையை அடையமுடியும்,” என்றார். மேலும் பேசிய அவர், “உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில், சுவாச சுகாதாரம் மற்றும் கைகளை சுத்தம் செய்வதை பின்பற்றுதல், பொது இடங்களில் முகக்கவசம்/கவசங்கள் அணிவதை பெரும் அளவுக்குப் பின்பற்றுவது போன்ற கொரோனா வைரஸ் தடுப்பதற்கான சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகபட்ச உந்துதல் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமாகும்,” என்று வலியுறுத்தினார். கொரோனா தொற்றால் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் இருந்த மாவட்டங்களின் அதிகாரிகளுடனும் திரு.ஹர்ஷ் வர்த்தன் உரையாடினார்.    

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667042

                                                                    -----



(Release ID: 1667080) Visitor Counter : 160