கலாசாரத்துறை அமைச்சகம்

இந்தியாவின் 'சின்னஞ்சிறிய சித்திரங்களை' தற்போது ஒட்டுமொத்த உலகமும் காணலாம்: கூகிளுடன் இணைந்து தேசிய அருங்காட்சியகம் புதிய முயற்சி

Posted On: 22 OCT 2020 4:03PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் பல நூற்றுக்கணக்கான சிறிய சித்திரங்களை "லைஃப் இன் மினியேச்சர்" திட்டத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்கள் இணையவழியில் இனி கண்டு களிக்கலாம்.

இத்திட்டத்தை மெய்நிகர் முறையில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் பட்டேல் இன்று தொடங்கி வைத்தார்.

புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் கூகிள் ஆர்ட்ஸ் & கல்ச்சர் ஆகியவற்றுக்கிடையேயான கூட்டுத் திட்டமான இதன் மூலம் g.co/LifeInMiniature என்னும் இணைப்பில் புகழ்பெற்ற சிறிய ஓவியங்களை இதுவரை கண்டிராத வகையில் அனைவரும் கண்டு மகிழலாம்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமரின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டதோடு, இந்தியாவின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு அவசியமானது என்றும் கூறினார்.

தொழில்நுட்பத் துறையில் முதன்மை இடத்தை எட்டியிருப்பதற்காகவும், தனது பொருட்களில் புதுமைகளை படைப்பதற்கு கூகிள் செலுத்தி வரும் கவனத்துக்காகவும், அந்த நிறுவனத்தை பாராட்டிய அவர், சமூக அதிகாரமளித்தல் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கான கூகிளின் உறுதி இந்தியாவுக்கு ஒரு உண்மையான சொத்து என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666775

----



(Release ID: 1666817) Visitor Counter : 175