பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

தொகுதிகள் மற்றும் மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கைகளை வெளியிட்டார், மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்

प्रविष्टि तिथि: 20 OCT 2020 3:54PM by PIB Chennai

தொகுதிகள் மற்றும் மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கைகளை, மத்திய வேளாண் மற்றும் விவசாய நலன், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் காணொளி வாயிலாக இன்று வெளியிட்டார். இந்த அறிக்கையில், தொகுதிகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளைப் படிப்படியாக மேம்படுத்துவது தொடர்பாக திட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

தொகுதிகள் மற்றும் மாவட்ட அளவில் இருக்கும் வளங்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னுரிமைப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்தப் பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த இந்த வரைவறிக்கை ஏதுவாக இருக்கும் என்று நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். ஊரக இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியை அடைவதற்கு இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666107

----- 


(रिलीज़ आईडी: 1666142) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Telugu , Malayalam