சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அசாமில் அமையவுள்ள நாட்டின் முதல் மல்ட்டி மோடல் லாஜிஸ்டிக் பூங்காவுக்கு நிதின் கட்கரி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

प्रविष्टि तिथि: 19 OCT 2020 6:02PM by PIB Chennai

அசாமில் அமைக்கப்பட உள்ள நாட்டின் முதல் மல்ட்டி மோடல் லாஜிஸ்டிக் பூங்காவிற்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, காணொளிக் காட்சி வாயிலாக நாளை அடிக்கல் நாட்டுகிறார். மாநிலத்தின் முதலமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். மத்திய இணை அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங், டாக்டர் வி கே சிங், திரு ரமேஷ்வர் தெலி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

 

விமானம், தரைவழி, ரயில் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தை இணைக்கும் இந்தப் பூங்கா, 693.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்தப் பூங்கா நிறுவப்பட உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665855

----


(रिलीज़ आईडी: 1665963) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Odia , Telugu , Malayalam