சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சம்வத்-6 நிகழ்ச்சியின் போது ஒவ்வொருவருக்கும் ஷரத் நவராத்திரி வாழ்த்துகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துக் கொண்டார்.
Posted On:
18 OCT 2020 2:15PM by PIB Chennai
சமூக ஊடகத்தின் வாயிலான ஞாயிறு சம்வத்-6வது நிகழ்ச்சியில் தம்முடன் உரையாடிவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பதில் அளித்தார். நவராத்திரிக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார். பிரதமரின் பொது இயக்கத்துக்கு கவுரவம் அளிக்கும்படி தமது சமூக ஊடகப் பின்தொடர்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். கொவிட்டுக்கு ஏற்ற நடத்தைகளை மதரீதியாக பின்பற்ற மற்றவர்களுக்கான தூதுவர்களாக மாறும்படியும் அவர்களை கேட்டுக்கொண்டார். பாரம்பர்யமான வழியில் தங்கள் நேசத்துக்கு உரியவர்களுடன் வீட்டிலேயே ஒவ்வொருவரும் விழாவைக் கொண்டாட வேண்டும் என்ற நமது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தினார்.
“இந்த விழா காலத்தில், கொண்டாட்டத்தை விடவும், தொண்டு செய்வது முன்னுரிமை பெற வேண்டும். கொவிட்-19-ன் நெஞ்சை உருக்கும் தாக்கம் காரணமாக நமக்காக உலகம் முழுவதும் லட்சகணக்கான கொரோனா போராளிகள் போராடி வருகின்றனர். எனவே, எனது சொந்த கொண்டாட்டத்தைக் கூட குறைத்துக் கொண்டுள்ளேன்,” என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறி உள்ளார்.
அண்மையில் கேரளாவில் கொவிட்-19 பாதிப்புகள் திடீரென அதிகரித்தது குறித்த கருத்துகளையும் ஹர்ஷ் வர்த்தன் பகிர்ந்து கொண்டார். ஜனவரி 30-ஆம் தேதி மற்றும் மே -3ஆம் தேதி இடையே கேரளாவில் 499 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர். அண்மையில் ஓணம் பண்டிகை கொண்டாடத்தின்போது மாநிலம் முழுவதும் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துக்கான மாநிலத்துக்கு வெளியே, மாநிலத்துக்கு உள்ளே போக்குவரத்துகளை அதிகரித்ததுடன் பல்வேறு சேவைகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்த அலட்சியத்தின் விலையை இப்போது கேரளா கொடுத்திருப்பதாகவும் ஹர்ஷ் வர்த்தன் வருத்தம் தெரிவித்தார். இதனால் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொவிட் 19 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது என்றும் அவர் கூறினார். “மாநிலத்தில் ஓணம் பண்டிகைகொண்டாட்டத்தின் காரணமாக கேரளாவில் தொற்றின் புள்ளிவிவரம் மாறி விட்டது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்கானது.” என்று கூறினார். விழா காலத்தில் திட்டமிடுவதில் அலட்சியமாக இருந்ததால் இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் பணியாற்ற வேண்டும் என்றும் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665634
**********************
(Release ID: 1665656)
Visitor Counter : 277
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam