குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
அங்கீகரிக்கப்படாத எம் எஸ் எம் ஈ எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் குறித்து மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Posted On:
17 OCT 2020 9:41AM by PIB Chennai
எம் எஸ் எம் ஈ எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்புக்கான இயக்குநர் நியமனம் குறித்து ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது இந்திய அரசின்
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் பெயரை இந்த அமைப்பு பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
எம் எஸ் எம் ஈ எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்புக்கும், இந்திய அரசின்
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெளிவு படுத்தப்படுகிறது.
மேலும், அந்த அமைப்பின் எந்த பதவிக்கும் எந்த நபரையும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை.
இத்தகைய தகவல்கள் அல்லது நபர்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
**********************
(Release ID: 1665441)
Visitor Counter : 171