பிரதமர் அலுவலகம்
கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து கர்நாடக முதல்வருடன் பிரதமர் பேச்சு
Posted On:
16 OCT 2020 8:52PM by PIB Chennai
கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து, மாநில முதல்வர் திரு. எடியூரப்பாவிடம், பிரதமர் திரு.நரேந்திர மோடி பேசினார்.
இது குறித்து பிரதமர் டிவிட்டரில் விடுத்துள்ள பதிவில், ‘‘ கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் பேசினேன். கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நாம் ஒற்றுமையுடன் துணை நிற்கிறோம். நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு முடிந்த அளவு அனைத்து உதவிகளும் வழங்கும் என உறுதி அளித்தேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
**********************
(Release ID: 1665294)
Visitor Counter : 223
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam