சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) சட்ட மற்றும் நீதித்தறை அமைச்சர்களின் மாநாட்டை காணொலி காட்சி மூலமாக இந்தியா நடத்தியது

Posted On: 16 OCT 2020 3:43PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நீதித்துறை அமைச்சர்களின் 7வது மாநாட்டை, மத்திய சட்ட அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் இன்று தலைமை தாங்கி நடத்தினார்.

இதில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஜ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் நீதித்துறை அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் மத்திய சட்ட  அமைச்சகத்தின் செயலாளர் திரு அனூப் குமார் முக்கிய உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சட்ட அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் எளிதாக நீதி கிடைக்க, பிரதமர் மோடி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். 

சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச சட்ட சேவைகள் அளிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.  2017ம் ஆண்டில், தொலைதூர சட்ட சேவைகள் மூலம், ஏழைகளுக்கு 3.44 லட்சம் இலவச சட்ட ஆலோசனைகள் காணொலி காட்சி மூலமாக வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  இந்திய நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணைகள் நடப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். கொரோனா சமையத்தில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாரணைகள், காணொலி காட்சி மூலமாக நடந்தது என்றும், இவற்றில் 9 ஆயிரம் விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நடந்ததாகவும் அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

எஸ்சிஓ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள், இணைந்து பணியாற்றுவதோடு, உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை மதித்து நடக்க வேண்டும் எனவும்அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

எஸ்சிஓ நாடுகளின் நீதித்துறை அமைச்சர்கள் அமைப்பு தங்கள் கருத்துக்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

மாநாட்டு இறுதியில் எஸ்சிஓ அமைப்பில் உள்ள உறுப்புகள் நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு செயல் திட்டங்களை அமல்படுத்த வேண்டும், கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும், பரஸ்பர சட்ட உதவி குறித்து ஆலோசிக்க வேண்டும் என கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665116

**********************



(Release ID: 1665152) Visitor Counter : 303