பாதுகாப்பு அமைச்சகம்
சிறந்த முதல் மற்றும் இரண்டாவது கமாண்ட் மருத்துவனைகளுக்கான பாதுகாப்புத்துறை அமைச்சர் கோப்பை வழங்கப்பட்டது.
प्रविष्टि तिथि:
16 OCT 2020 2:40PM by PIB Chennai
2019-ம் ஆண்டுக்கான ராணுவப் படைகளுக்கான மருத்துவச் சேவைகள் அளிக்கும் சிறந்த மற்றும் இரண்டாவது சிறந்த கமாண்ட் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்புத்துறை அமைச்சரின் கோப்பைகளை திரு.ராஜ்நாத் சிங் 2020 அக்டோபர் 16-ம் தேதி வழங்கினார். பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனை (விமானப்படை)., கொல்கத்தாவில் உள்ள கமாண்ட் மருத்துவமனை (கிழக்கு கமாண்ட்) ஆகியவை முறையே 2019-க்கான சிறந்த மற்றும் இரண்டாவது சிறந்த கமாண்ட் மருத்துவமனையாக தீர்மானிக்கப்பட்டன. விருது விழாவில் பாதுகாப்புத்துறை செயலாளருடன் மூத்த படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ராணுவப்படைகள் மருத்துவ சேவைகள் வழங்கிய பாராட்டத்தக்க சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய இரண்டு மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். போர் மருத்துவ ஆதரவு முதல் செயல்பாட்டில் பங்கெடுக்க ஈடுபடுத்தப்படும் படைகள் வரை மத்திய மண்டல, மண்டல மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளின் அதி நவீன சுகாதாரப் பாதுகாப்பு சேவைகள் ராணுவப்படைகளின் மருத்துவ சேவைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665093
**********************
(रिलीज़ आईडी: 1665114)
आगंतुक पटल : 240