விவசாயத்துறை அமைச்சகம்
இரண்டு நாள் 'நான்காவது வேளாண் கண்ணோட்ட மன்றம் 2020' இணைய கருத்தரங்கம் தொடங்கியது
प्रविष्टि तिथि:
15 OCT 2020 5:14PM by PIB Chennai
புது தில்லியில் உள்ள கிருஷி பவனில், இரண்டு நாள் 'நான்காவது வேளாண் கண்ணோட்ட மன்றம் 2020' இணைய கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய வேளாண் இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, 2020-21-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.4 சதவீதம் வளர்ச்சியை வேளாண்துறை அடைந்ததாக குறிப்பிட்டார்.
இந்த சாதனைக்காக, விவசாயிகளையும் இதர பங்குதாரர்களையும் அமைச்சர் பாராட்டினார். நாட்டின் பொருளாதாரம் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும், விவசாயத்துறை சிறந்து விளங்குவதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு விவசாயியையும், ஒவ்வொரு பங்குதாரரையும் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளையும் விவசாய துறையின் வளர்ச்சிக்காக பாராட்டுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.
சமீபத்திய வேளாண் சீர்திருத்தங்களை பற்றி பேசிய அவர், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளை வலுப்படுத்தி, வளப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664807
(रिलीज़ आईडी: 1665027)
आगंतुक पटल : 256