நிதி அமைச்சகம்

வோடபோன் நிறுவனத்தின் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு குறித்து நிதி அமைச்சகத்தின் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2020 1:49PM by PIB Chennai

வோடபோன் நிறுவனத்தின் வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று அரசின் அட்டர்னி ஜெனரல் அரசிடம் கருத்துத் தெரிவித்திருப்பதாக சில பிரிவு ஊடகங்களில் ஒரு குழப்பமான செய்திக் கட்டுரை வலம் வருகிறது. இந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது முழுவதும் உண்மையல்ல. அந்த செய்திக்கு அடிப்படை ஆதாரமும் இல்லை.

தீர்ப்பின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அமைச்சகத்துக்குள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிகைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664705

*******

(Release ID: 1664705)


(வெளியீட்டு அடையாள எண்: 1664752) வருகையாளர் எண்ணிக்கை : 168
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Telugu