வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புற ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கான வாடகை வீடுகள் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது: திரு ஹர்தீப் சிங் புரி
Posted On:
14 OCT 2020 5:25PM by PIB Chennai
திட்டத்துக்கான சலுகைக் கடன், இலவச உள்கட்டமைப்பு வசதிகள், இலவச தரைப் பகுதி விகிதம் (FAR) உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நகர்ப்புற ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கான வாடகை வீடுகள் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி கூறினார்.
பிரதமரின் வீட்டுவசதி திட்டம்-நகர்ப்புறத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுபடியாகக்கூடிய வாடகை வீடு வளாகங்கள் திட்டம் நகர்ப்புற ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்தோரின் நலனைக் கருதி, அவர்களுக்கு கண்ணியமான மற்றும் கட்டுபடியாகக்கூடிய இருப்பிடங்களை வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கட்டுபடியாகக்கூடிய வாடகை வீடு வளாகங்கள் திட்டத்தின் இணையதளம் மற்றும் வழிகாட்டுதல்களை அடங்கிய புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இணையக் கருத்தரங்கு ஒன்றில் இன்று பேசிய போது திரு புரி இவ்வாறு கூறினார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு துர்கா சங்கர் மிஷ்ரா இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
கட்டுபடியாகக்கூடிய வாடகை வீடு வளாகங்கள் திட்டத்தின் விருப்பத்தை தெரிவிக்கும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
முன்னதாக, 2020 ஜூலை 31 அன்று, கட்டுபடியாகக்கூடிய வாடகை வீடு வளாகங்கள் திட்டத்தின் அறிவுசார் தொகுப்பு வெளியிடப்பட்டது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கையெழுத்திடப்பட வேண்டிய ஒப்பந்தம் மற்றும் ஆங்கிலத்தில் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664393
**********
(Release ID: 1664393)
(Release ID: 1664646)
Visitor Counter : 228