ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள தொலைதூர வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
Posted On:
14 OCT 2020 4:51PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், இந்திய - பூட்டான் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள ப்ரோக்சர்தாங் கிராமத்தில் 22 வீடுகளில், 170 மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 2019 வரை இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் ஜல் ஜீவன் இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின், மாநிலப் பொது சுகாதாரத் துறையின் மூலம் அங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டது. சுமார் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி செய்துத் தரப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலையினால் அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி செய்து தரப்படும் பணி பெரும் சவாலாகவே இருந்தது. எனினும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்தத் திட்டம் அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்ததற்கிணங்க, ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் மாநில அரசுகளின் துணையோடு வரும் 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664369
**********************
(Release ID: 1664496)
Visitor Counter : 134