மத்திய அமைச்சரவை
திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிலத்தடி நீர் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையோன ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
14 OCT 2020 4:53PM by PIB Chennai
மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB), நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிப்பு துறை மற்றும் ஆஸ்திரேலியாவின் நிலத்தடி நீர் மேலாண்மை நிறுவனமான மார்வி பார்ட்னர்ஸ் ஆகியவை இடையே கடந்தாண்டு அக்டோபரில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் எடுத்துக் கூறப்பட்டது.
நிலத்தடி நீர் உட்பட நீர்வளங்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் கல்வியில் ஒத்துழைப்புடன் செயல்படவும், வேளாண்மை, நகர்ப்புறம், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்கான நீர்பாதுகாப்பு பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
**********************
(Release ID: 1664443)
Visitor Counter : 172
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam