பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு, கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் சத்தீஸ்கரின் சிறு வன உற்பத்தி கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய "பழங்குடியினருக்கு தொழில்நுட்பம்" என்ற பயிற்சி முகாம், காணொலி வாயிலாக இன்று தொடங்கியது

"பழங்குடியினருக்கு தொழில்நுட்பம்"என்னும் பயிற்சி முகாமின் மூலம், பழங்குடியின தொழிலதிபர்களுக்கும், நகர்ப்புற சந்தைகளுக்கும் இடையேயான இடைவெளியை நீக்க முடியும்

Posted On: 13 OCT 2020 1:32PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ட்ரைஃபட் என்று அழைக்கப்படும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு, சத்தீஸ்கரின் சிறு வன உற்பத்தி கூட்டமைப்பு மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய "பழங்குடியினருக்கு தொழில்நுட்ப முயற்சி" என்ற பயிற்சி முகாம், காணொலி வாயிலாக இன்று தொடங்கியது. ட்ரைஃபெட் அமைப்பும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகமும் இணைந்து நடத்திய இந்த பயிற்சி முகாமில்

வன்தன் திட்டத்தினால் பயனடையும் பழங்குடியினரின் திறனை மேம்படுத்தவும், அவர்கள் சுயமாகத் தொழில் நிறுவனங்களை நடத்தவும், சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்தவும் பயிற்சி வழங்கப்படுகிறது

இன்று முதல் வரும் நவம்பர் ஏழாம் தேதி வரை மொத்தம் 6 வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், சத்தீஸ்கர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த வன்தன் திட்டப் பயனாளிகள் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ட்ரைஃபெட் அமைப்பின் மேலாண் இயக்குனர் திரு பிரவீர் கிருஷ்ணா, "பழங்குடியினருக்குத் தொழில்நுட்பம்" என்ற இந்த தனித்துவமான முயற்சியின் மூலம் தற்சார்பு இந்தியா திட்டத்தை பழங்குடியினருக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது என்றும், இதன்மூலம் பழங்குடியின தொழிலதிபர்களுக்கும், நகர்ப்புற சந்தைகளுக்கும் இடையேயான இடைவெளியை நீக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663955

******

(Release ID: 1663955)



(Release ID: 1663984) Visitor Counter : 194