தேர்தல் ஆணையம்

மாநிலங்களவையில் ஏற்படவிருக்கும் 11 காலியிடங்களுக்கான தேர்தல்

Posted On: 13 OCT 2020 12:27PM by PIB Chennai

உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் 2020-இல் நிறைவடைகிறது.

உத்திரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் சந்திரபால் சிங் யாதவ், திரு ஜாவெத் அலி கான், திரு அருண் சிங், திரு நீரஜ் சேகர், திரு பி எல் புனியா, திரு ஹர்தீப் சிங் புரி, திரு ரவி பிரகாஷ் வெர்மா, திரு ராஜாராம், திரு ராம்கோபால் யாதவ், திரு வீர் சிங் மற்றும் உத்திரகாண்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ராஜ் பாப்பர் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, இந்த இடங்களுக்காக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தேர்தலுக்கான அறிவிக்கைகள் 2020 அக்டோபர் 20 அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2020 அக்டோபர் 27 ஆகும்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 2020 அக்டோபர் 28 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி 2020 நவம்பர் 2 ஆகும்.

2020 நவம்பர் 9 அன்று தேர்தல் நடைபெற்று, அன்று மாலை 5 மணி அளவில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் நடைமுறை 11 நவம்பருக்குள் நிறைவு பெறும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663940

 

*********

(Release ID: 1663940)


(Release ID: 1663949) Visitor Counter : 125