குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குடியரசுத் துணைத் தலைவருக்கு கொவிட்-19 தொற்று இல்லை, வழக்கமான பணிகளை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2020 4:57PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவிற்கு கொவிட்-19 தொற்று இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் இன்று தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இன்று அவருக்கும் அவரது மனைவி திருமதி உஷா நாயுடுவுக்கும் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இருவருக்கும் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

திரு வெங்கையா நாயுடுவின் உடல்நிலை சீராக இருப்பதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் தமது பணிகளை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1663788) வருகையாளர் எண்ணிக்கை : 215
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Telugu , Malayalam