பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு, சத்தீஸ்கரின் சிறு வன உற்பத்தி கூட்டமைப்பு மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து நாளை "பழங்குடியினருக்கு தொழில்நுட்ப முயற்சி" என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது


"பழங்குடியினருக்கு தொழில்நுட்ப முயற்சி"- தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சிமுகாம் நடத்தப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2020 4:15PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ட்ரைஃபட் என்று அழைக்கப்படும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு, சத்தீஸ்கரின் சிறு வன உற்பத்தி கூட்டமைப்பு மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து "பழங்குடியினருக்கு தொழில்நுட்ப முயற்சி" என்ற பயிற்சி முகாமை நாளை நடத்துகின்றன. வன்தன் திட்டத்தின் கீழ் பழங்குடியினரின் திறனை மேம்படுத்தவும், அவர்கள் சுயமாகத் தொழில் நிறுவனங்களை நடத்தவும், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663702

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1663758) வருகையாளர் எண்ணிக்கை : 282
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Telugu