ஆயுஷ்
குணப்படுத்துவராக மகாத்மா காந்தியை தேசிய இயற்கை மருத்துவ மையம் நினைவுகூர்கிறது
Posted On:
12 OCT 2020 11:18AM by PIB Chennai
மகாத்மா காந்தியால் 1945-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அகில இந்திய இற்கை மருத்துவ பவுண்டேஷன் அறக்கட்டளையின் இல்லமாக இருந்த இது, இப்போது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் புனேவில் செயல்படும் தேசிய இயற்கை மருத்துவ மையமாக (எம்ஐஎன்)இருக்கிறது. இந்த மையம் மகாத்மா காந்தி மனிதகுலத்துக்கு செய்த பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் வித த்தில் காந்தியின் 151வது ஆண்டு பிறந்த தினத்தை கடைபிடித்தது.
ஏற்கனவே கூறியபடி, எம்ஐஎன் முயற்சியில் பெரும் தொடராக 48 இணைய கருத்தரங்குகள் உடல் நலம், உணவு மற்றும் ஊட்டசத்து குறித்த மகாத்மா காந்தியின் எண்ணங்களில் பொது ஆர்வத்தை மீண்டும் தூண்டும் வகையில் காந்தி ஜெயந்தி அன்று தொடங்கின. முதல்வாரம், இந்த பெரும் தொடர் இணைய கருத்தரங்கில், அப்போதைய காலகட்டத்தின் அவரது எண்ணங்கள் இந்த காலகட்டத்துக்கும் ஏற்றதாக இருக்கும் வகையிலான மகாத்மா காந்தியின் எண்ணங்களின் சில அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.
‘வாழும் காந்தி பொதுமக்களுக்கான நினைவுகள்’ என்ற தொடக்க நிகழ்வுடன் அக்டோபர் 2-ம் தேதி எம்ஐஎன்-னின் காந்தி ஜெயந்தி நிகழ்வுகள் தொடங்கின. தொடக்க விழா, புனேவில் உள்ள எம்ஐஎன் அமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட கடவுளின் சேவர்கள் சொசைட்டி என்ற உறுப்பினர் அமைப்பு, அகில இந்திய இயற்கை மருத்துவ பவுண்டேஷன் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு.லால் கன்ஷானியால் தொடங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663641
********
(Release ID: 1663641)
(Release ID: 1663648)
Visitor Counter : 216