சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        இந்தியாவில் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சம் என்ற முக்கிய இலக்கை கடந்தது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                11 OCT 2020 11:35AM by PIB Chennai
                
                
                
                
                
                
                கொவிட் மேலாண்மையில் இந்தியா இன்று மற்றொரு புதிய உச்சத்தை தொட்டது. குணமடைந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 60 லட்சம் (60,77,976) என்ற முக்கிய இலக்கை கடந்துள்ளது
ஒவ்வொரு நாளும் கொவிட் நோயாளிகள் அதிகளவில் குணமடைவதால், குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரிக்கிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 89,154  பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதம் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 
தொடர்ந்து 8வது நாளாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-க்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 918 ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை  8,67,496 -ஆக உள்ளது.  இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 
நாட்டில் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் வீதம் 86.17%-மாக அதிகரித்துள்ளது. 
குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், இந்த பட்டியலில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில், 74,383 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663480
-----  
                
                
                
                
                
                (Release ID: 1663517)
                Visitor Counter : 161